இந்தியா, ஏப்ரல் 1 -- கமல் மற்றும் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரீலேகா டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'சகலகலா வல்லவன் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து நடித்தேன். அந்தப்படத்தின் சூட்டிங் பொள்ளாச்சியில் நடைபெற்றது. அந்த இடம் முழுவதுமே வயல்வெளிகளால் நிறைந்து இருக்கும். படப்பிடிப்பிற்கு இடையே கிடைக்கும் பிரேக்கில், கமல்ஹாசனும், ஒய் ஜி மகேந்திரனும் செய்ததை சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ஆம், பிரேக்கில் மகேந்திரன் வாயால் மெட்டுப்போட, கமல்ஹாசன் கெட்ட வார்த்தைகளை மிக்செய்து அதனை பாடலாக பாடுவார். கேட்பதற்கு நாராசமாக இருந்தாலும், அவ்வளவு ஜாலியாக இருக்கும். என்னுடைய உறவினர் கமல்ஹாசன் தீவிர ரசிகர். அதனால், அவர் என்னிடம் கமல்ஹாசனை நேரில் பார்த...