இந்தியா, பிப்ரவரி 6 -- பாட்டல் ராதா திரைப்படத்தில் அஞ்சலம் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சனா நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில், ' அண்மையில் வெளிவந்த என்னுடைய பாட்டல் ராதா திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கும், பாராட்டிற்கும் நான் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். இது உண்மையில் எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது

அந்தப் படத்தில் நான் நடித்த அஞ்சலம் கதாபாத்திரம் ஒரு மிகச்சிறந்த பயணம். மிகவும் அழகாக அந்த கதாபாத்திரத்தை எழுதி, அதில் என்னை நம்பி நடிக்க வைத்ததற்காக இயக்குனர் தினகரன் சிவலிங்கத்திற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிப்பட்ட ஸ்பெஷலான ஒரு படத்தில் என்னை கொண்டு வந்ததற்காக தயாரிப்பாளர்கள் பா ரஞ்சித்திற்கும், அருண் பாலாஜிக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அ...