இந்தியா, பிப்ரவரி 11 -- Actress Rohini: 'காதல் என்பது பொதுவுடமை' படத்தின் இசைவெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

நடிகை ரோகிணி பேசுகையில், "ஏன் 'கூடாது' என்பதுதான் படம் எடுக்கிறதுக்கான முதல் காரணம். 'இந்தப் படத்தை மலையாளத்தில் எடுங்க'ன்னு சொன்னபோது, 'இல்ல என்னோட தமிழ் ஆடியன்ஸ் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு'ன்னு ஒரு இயக்குநர் இப்படத்தைக் கொண்டு வந்திருக்கார்.

இது சம்பந்தமான உரையாடலை எங்குத் தொடங்கவேண்டு...