இந்தியா, ஏப்ரல் 5 -- Actress Raveena: சின்னத்திரையில் தங்கம், பூவே பூச்சூடவா, மெளன ராகம் 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான ரவீனா தாஹா, குக் வித் கோமாளி சீசன் 4 -ல் பங்கேற்று, அப்படியே பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். நிகழ்ச்சிக்குள் இவருக்கும் மணிக்கும் இடையே லவ்ஸ் ஓடுவதாக கூறப்பட்ட நிலையில், வெளியே வந்த பின்னர் இருவருமே அது குறித்து வாய்த்திறக்கவில்லை.

பிக்பாஸ் புகழ் அவரை நன்றாகவே மக்களிடம் கொண்டு சேர்த்திருக்க, வெளியே வந்த ரவீனா விஜய் டிவியின் சிந்து பைரவி சீரியலில் கமிட் செய்யப்பட்டார். ப்ரோமோக்களும் வெளியாகி கவனம் பெற்றது. திடீரென்று என்ன ஆனது என்று தெரியவில்லை. அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன் பின்னர் அவர் எந்த டிவி சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்கவில்லை.

மேலும் படி...