இந்தியா, மார்ச் 10 -- Actress Rashmika Mandana: நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு பாடம் கற்பிப்பதாக கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா கனிகா முன்னதாக பேசியிருந்தார். இந்த வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர், இந்த வார்த்தைகள் குறித்து ஏஎன்ஐக்கு விளக்கம் அளித்துள்ளார்.

"நான் ராஷ்மிகா மந்தனாவிற்கு ஒரு பாடம் கற்பிப்பேன் என்று சொன்னபோது, வாழ்க்கைப் பாடங்களைப் பற்றித்தான் சொன்னேன். ஆனால் நான் அவரைத் தாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.அவர் நடிகையாக மாறிய பின் ஏறிய ஏணியை உதைக்கக் கூடாது என்று தான் சொன்னேன்" என்று கூறியிருக்கிறார்.

மேலும், தனது கருத்துக்கள் நடிகைக்கு தன்னை வளர்த்த மாநிலத்தை மதிப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதற்காகவே கூறியதாகவும் அவர் பேசியுள்ளார். "எங்கள் மாநில நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டபோது ரஷ்மிகா மந்தனா ...