இந்தியா, ஏப்ரல் 7 -- Actress Oviya: சமூக வலைத்தளங்களில் தனது கருத்துகளாலாலும், செய்கைகளாலும் பல விவாதங்களில் சிக்கி வைரலாகி வரும் நடிகையாக மாறி இருப்பவர் தான் நடிகை ஓவியா. கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாள மொழி மட்டும் அல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ தான் இப்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க| பாங்காக் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஓவியா.. வெளியான வீடியோ.. தலைவிக்கு தில்லு தான்..

நடிகை ஓவியா ஹெலன், சமூக வலைத்தளத்தில் தனது நண்பருடன் கடற்கரைக்குச் சென்ற வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் கடற்கரையில் சில மீனவர்கள் தங்கள் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவரைக் காட்டியபடியே, கேமரா ஆன் செய்த அவர் கையில் சிகரெட் பிடித்தபடி மீனவர்களிடம் சென்றார்...