இந்தியா, மார்ச் 7 -- Actress Neetu Chandra: நடிகை நீது சந்திரா, ராப்பர் மற்றும் பாடகர் யோ யோ ஹனி சிங் இன் புதிய பாடல் 'மேனியாக்'கிற்கு எதிரான தனது கருத்துகளை தற்போது வழக்காக மாற்றியுள்ளார். இந்தப் பாடலில் பெண்களை பாலியல் பொருளாக சித்தரிப்பதாக குற்றம் சாட்டி, யோ யோ ஹினி சிங் மீது பாட்னா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அத்துடன், 'இது போன்ற பாடல்களுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று நடிகை நீது சந்திரா வலியுறுத்தியுள்ளார்.

பிடிஐயின் அறிக்கையின் படி, நீது சந்திரா பாட்னா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் ராப் பாடகர் ஹனி சிங் தனது 'மேனியாக்' பாடலில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஹனி சிங்கோடு இணைந்து பாடிய லியோ கிரேவால், ராகினி...