இந்தியா, மார்ச் 14 -- Actress Nayanthara: எஸ். சசிக்காந்த் இயக்கியுள்ள 'டெஸ்ட்' படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரமான குமுதாவை அறிமுகப்படுத்தும் புதிய வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் தளம் வெளியிட்டது. இந்த டிசரில், நயன்தாரா ஒரு குழந்தையையும், அன்பான வாழ்க்கையையும் எதிர்பார்க்கும் நபராக காட்டப்பட்டிருக்கிறார். அதற்காக அவர் எந்த விலை கொடுத்தும் அடையத் தீர்மானமாக இருப்பதையும் காட்டுகிறது.

டெஸ்ட் படத்தில் நயன்தாராவின் அறிமுக டிசர் கடவுளிடம் வேண்டுவது போல் உள்ளது. அதில், 'ஒரு கனவு மட்டும் தான்' என்று தன் பிரார்த்தனையை அவர் தொடங்குகிறார். 'ஒரு சிறிய வீடு, இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொள்ள ஒரு கணவன், அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை' என்பது தான் அவள் கடவுள் தனக்கு தரவேண்டும் என விரும்புவது.

டீசரின் படி மாதவன், நயன்தாராவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்திரு...