இந்தியா, ஜனவரி 27 -- Actress Meena: நடிகை மீனாவை நமக்கு குழந்தை நட்சத்திரமாக இருந்தே தெரியும். ஆனால், அவரது அம்மாவைப் பற்றியம் அவர் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தது பற்றி தெரியுமா உங்களுக்கு?

நடிகை மீனா பற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது குடும்பம் பற்றிய தகவல்கள் குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் மெட்ரோ மெயில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில், அவர் மீனா மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி பல தகவல்களை கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில், மீனா தற்போது 300 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி இருப்பதாக பலரும் பொய்யான தகவல்களை பலரும் பரப்பி வருகின்றனர். ஆனால் அவர் அப்படி எதுவும் சொத்துகள் வாங்கியதாகத் தெரியவில்லை. 300 கோடிக்கு சொத்து வாங்கினால், அதற்கு 100 கோடிக்கும் மேலாக வரி மட்டுமே செலுத்த வேண்டும் எனத...