இந்தியா, பிப்ரவரி 8 -- Actress Latha: எம்ஜிஆருடன் ஜோடி போட்டு நடித்தவர்களில் முக்கியமான நபர் நடிகை லதா. இவரை எம்ஜிஆரே தனது கம்பெனியின் கீழ் 1970களிலே நடிகையாக அறிமுகம் செய்தார். அன்று தொடங்கிய அவரது திரைப்பயணம் இன்றும் தொடர்கிறது.

1973ம் ஆண்டு வெளியான எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே பல நாடுகள் சுற்றி வந்து, மெகாஹிட் கொடுத்து அசத்தினார்.

பின் இவரது நடிப்பு பாராட்டப்பட்டு பிலிம்பேர், கலைமாமணு உள்ளிட்ட விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டது. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சமயத்திலேயே அம்மாவின் ஆசைக்காக தொழிலதிபரை திருமணம் செய்து சினிமா வாழ்க்கையுடன் குடும்ப வாழக்கையையும் கவனித்துக் கொண்டார். இந்நிலையில், அவர் தன் திரையுலக அனுபவங்கள் குறித்து சில மாதங்களுக்கு முன் சினிமா பிரபலம் சித்ரா லட்சுமண...