இந்தியா, நவம்பர் 25 -- பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியுடன் தொலைபேசியில் உரையாடியபோது அவரை ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா சிவா அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசியுள்ளனர். அவர்கள் இருவரும் பேசியதாக கூறப்பட்ட ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது.

இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக திருப்பூர் பாஜக அலுவலகத்தில் திருச்சி சூர்யா சிவா, டெய்சி ஆகியோரிடம் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டெய்சி , "எங்களுக்கிடையில் பரஸ்பரம் பேசி முடித்துக்கொண்டோம். தம்பி போலத்தான் சூர்யா சிவா இதனை பெரிதுபடுத்த வேண்டும். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை என்னிடம் பே...