இந்தியா, பிப்ரவரி 25 -- Actress Jyothika: தமிழ் திரையுலகில் மாபெரும் நடிகையாக கோலோச்சியவர் ஜோதிகா. இவர், நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிப்பதை நிறுத்தினார். பின், பிள்ளைகள் வளர்ந்த பின் மீண்டும் நடிக்க வந்த அவர், தற்போது தங்கள் இரண்டு குழந்தைகளுடன் மும்பையில் குடியேறினர்.

ஜோதிகா தற்போது தனது நெட்ஃபிளிக்ஸ் தொடரான டப்பா கார்டெல் வெப் சீரிஸின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். இது தொடர்பான ஸ்கீரின் மீடியா நேர்காணல் ஒன்றில், நடிகர் சூர்யாவுடனான தனது வாழ்க்கையைப் பற்றியும், அவர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பெற்றோராக நிர்வகிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் மனம் திறந்து பேசினார்.

அப்போது பேசிய ஜோதிகா, "வீட்டுக்குள் நுழையும்போது நானும் என் கணவர் சூர்யாவும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை வாசலுக்கு வெளியே விட்டுவிடுவோம் என்று நினைக...