இந்தியா, மார்ச் 1 -- Actress Jyothika:தமிழ் சினிமாவில் பெரிய இயக்குநர்கள் பெண் நடிகைகளுக்காக படம் எடுப்பதில்லை. இது பெரிய குறையாக உள்ளது என நடிகை ஜோதிகா வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகை ஜோதிகா, ஷபானா ஆஸ்மி, ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆனந்த், நிமிஷா சஜயன் மற்றும் ஷிபானி டாண்டேகர் நடித்துள்ள வெப் சீரிஸ் டப்பா கார்ட்டெல். இது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாநதை ஒட்டி, அதன் புரொமஷன் நிகழ்ச்சிக்காக ஜோதிகா, ஃபீவர் எஃப்எம்மில் பேட்டி அளித்தார்.

அப்போது அளித்த பேட்டியில், டப்பா கார்ட்டெல் குழுவினருடன் ஜோதிகா பல விஷயங்களை குறித்து பேசினார். குறிப்பாக தமிழ் சினிமா குறித்த கருத்துகளையும் அவர் எடுத்துக் கூறினார். ஆண்கள் வயதாகும்போது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில் பெண்கள் வயதாகக் கூடாது என்பது போன்ற சமூகத்தின் நிலைப்பாடு குறித்து தொகுப்பாளர் அவ...