இந்தியா, பிப்ரவரி 10 -- Actress Chandini: கன்னியாகுமரியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்ற சம்பவங்களை மையப்படுத்தி இயக்குநர் ஜே எஸ் கே ஃபயர் எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிக்பாஸ் பாலாஜி, ரக்ஷிதா மகாலட்சுமி, சாந்தினி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், படம் குறித்தும் தன் பர்சனல் வாழ்க்கை குறித்தும் நடிகை சாந்தினி இந்து தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் , "2018ல எனக்கு கல்யாணம் ஆச்சு. நாங்க ஒன்றரை வருஷம் முன்னாடியே எங்க கல்யாணத்துக்கு எல்லாம் பிளான் பண்ணி செட் பண்ணோம். அந்த டைம்ல நான் நடிச்ட படம் எல்லாம் கொஞ்சம் முன்னாடி ரிலீஸ் ஆகும்ன்னு நெனச்சேன். ஆனா அது கரெக்டா கல்யாணம் சமயத்துல தான் ரிலீஸ் ஆச்சு. படம் ஒருவேளை ரிலீஸ் ஆகிருந்தா நான் சினி...