இந்தியா, மார்ச் 30 -- Actress Aditi Rao Hydari: நடிகை அதிதி ராவ் ஹைதரி நடித்த ஹீராமண்டி: தி டயமண்ட் பஜார் வெப் சீரிஸிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் அவரது நடிப்புக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன.

அவரது 'கஜகாமினி' நடையும் இணையத்தில் வைரலானது. இவை எல்லாம் அதிதிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியதாம்.

இதுகுறித்து, அதிதி ராவ் ஹைதரி மனம் வருந்தி பேசியுள்ளார். பாரத் கான் உடனான யூடியூப் சேனல் உரையாடலில் பேசிய அதிதி, ஹீராமண்டி வெப் சீரிஸ் வெளியான பிறகு எனக்கு கிடைக்கும் சினிமா வாய்ப்பில்'வறட்சி' நிலவியது போல மாறியதாக தோன்றியது. அந்த சமயத்தில் தான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் கூறினார்.

அந்தப் பேச்சுவார்த்தையில், பாரத் மற்றும் அதிதி ஆகியோர் ஹீராமண்டியின் தாக்கம் பற்றி பேச...