இந்தியா, ஜனவரி 29 -- Actress Abhinaya: நாடோடிகள் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் அபிநயா. இவர் காது கேட்காத வாய் பேச முடியாமல் இருந்தும் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் அசத்தி இருப்பார். இதனால், நாடோடிகளைத் தொடர்ந்து தமிழில் ஈசன், மார்க் ஆண்டனி போன்ற படங்களிலும் பிற மொழி படங்களிலும் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

இவர், தனது சினிமா ஆசை, காதல், திருமணம், தன்னைப் பற்றிய வதந்திகள் குறித்து கலாட்டா மீடியா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "நான் சின்ன வயசுல எல்லாம் சினிமாவுக்குள்ள வருவேன்னு நெனச்சு பாத்ததே இல்ல. அதுக்கு எல்லாம் நான் என் அப்பாவுக்கு தான் நன்றி சொல்லணும்.

சின்ன வயசுல ஸ்கூல் லீவ் விட்டா அவரோட ஷூட்டிங் பாக்க போயிடுவோம். எங்க அண்ணனுக்கு அதெல்லாம் போர் அடிக்கும். ஆனா எனக்கு அப்படி இல்ல. ...