இந்தியா, மார்ச் 10 -- Actress Abhinaya: நாடோடிகள் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் அபிநயா. இவர் காது கேட்காத வாய் பேச முடியாமல் இருந்தும் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் அசத்தி இருப்பார். இதனால், நாடோடிகளைத் தொடர்ந்து தமிழில் ஈசன், மார்க் ஆண்டனி போன்ற படங்களிலும் பிற மொழி படங்களிலும் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு இப்போது தனது நீண்ட நாள் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். கையில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்தபடி, தன் காதலருடன் கோயில் மணியை அடிப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். ஆனால், இப்போது வரை அந்த நபர் யார் என்பதை அபிநயா வெளிப்படுத்தாமல் இருக்கிறார்.

மேலும் படிக்க: வயுத்து பொழப்புக்காக வதந்தி பரப்...