இந்தியா, மார்ச் 5 -- அண்ணா நகர் லயன்ஸ் கிளப் நடத்திவரும் சுவாமி விவேகானந்தா பரிசோதனை மையம், ஏழை எளிய மக்களுக்காக அனைத்து பரிசோதனையும் மிக குறைந்த செலவில் அரும்பாக்கத்தில் (DG வைஷ்ணவ் கல்லூரி வளாகம்) செயல்படுத்தி வருகிறது.

இதன் 26ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, மக்கள் சேவையில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி பேசி, நினைவு பரிசை வழங்கினார் நடிகர் விஷால்.

இந்த நிகழ்வில் விஷால் பேசும்போது, "லயன்ஸ் கிளப் சார்பில் வசதி இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் விஷயம் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்களுடைய அறக்கட்டளைக்கும் அவர்கள் நிறைய உதவி செய்திருக்கிறார்கள் என உதவியாளர் ஹரி மூலமாக தெரிய வந்து, அவர்களை சந்திக்கும் எண்ணத்தில் இருந்தேன்.

அதற்காகவே இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன். மற்றபடி இந்த நிகழ்வி...