இந்தியா, பிப்ரவரி 2 -- Actor Vinay: தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே படத்தில் சாக்லேட் பாயாக மக்களை வசியம் செய்த வினய், பின் அடுத்தடுத்த படங்களில் வில்லத்தனமான கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் இவரது இமேஜை மக்கள் மத்தியில் மாற்றியது. பின் அவர் டாக்டர் படத்திலும் வில்லனாக மாஸ் காட்டி இருப்பார். இப்போது, அவர் மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், வினய் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் எப்படி புகைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் என்பது குறித்தும் பேசி உள்ளார்.

அந்தப் பேட்டியில், "நான் உன்னாலே உன்னாலே படம் பண்ணும் போது நான் நிறைய சிகரெட் பிடிப்பேன். அதுக்கு அப்புறம் அதெல்லாத்தையும் நான் விட்டுட்டேன். அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள்ல எனக்கு ஒரு ஆக்சிடெண...