இந்தியா, மார்ச் 21 -- Actor Vikram: வீர தீர சூரன் படத்தின் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், '' முதலில் இப்படத்தின் தயாரிப்பாளரான ஷிபு சார் மற்றும் ரியா ஷிபுவிற்கு நன்றி. இந்தப் படத்தில் இதயபூர்வமான மனிதர்களுடன் பணியாற்றினேன். நான் 'தூள்' திரைப்படத்தை மதுரை சிந்தாமணி திரையரங்கத்தில் பார்த்திருக்கிறேன். அவரை இயக்குவதற்கு கிடைத்த வாய்ப்பிற்காக 'சீயான்' விக்ரமுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் படிக்க: வீர தீர சூரன் படத்தோட பிஜிஎம், மியூசிக் எப்படி இருக்கும் தெரியுமா?

அவர் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் . ஆனால் இப்போதும் ஒரு காட்சியின் போது என்ன? எப்படி ?நடிக்க வேண்டும் என கேட்கிறார். 'என்னப்பா செய்யணும்..?' என்று அவர் கேட்பது என்னை பயமுறுத்தும். அதற்கு நான் முதலில் தயாராகி ...