இந்தியா, பிப்ரவரி 22 -- Actor Unni Mukundan: மார்கோ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் உன்னி முகுந்தன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர், தமிழ், மலையாளம், தெலுங்கில் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது சினிமா வாழ்க்கையில் முத்தக் காட்சிகள், காதல் கசிந்துருகும் காட்சிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தனை வருடங்களாகியும் இன்னும் அவர் அதே கொள்கையைப் பின்பற்றுவதாகவும் கூறியிருக்கிறார். இனிமேலும் அதையே செய்வேன் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மலையாள சினிமா வரலாற்றில் மிகவும் முக்கிய படமாக மார்கோ அமைந்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி பெற்ற இந்தப் பட...