இந்தியா, மார்ச் 23 -- Actor Sushant Singh: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்வின் மரண வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தனது வழக்கின் விசாரணை முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதா அல்லது மேலும் விசாரணைக்கு உத்தரவிடுவதா என்பதை விரைவில் நீதிமன்றம் தீர்மானிக்கும்.

மேலும் படிக்க: சுஷாந்த் சிங்கை நினைவு கூறும் பாலிவுட் நடிகை சாரா அலி கான்..

2020 ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அன்று, மும்பை பாந்திரா புறநகர் பகுதியில் உள்ள தனது அபார்ட்மெண்டில் சுஷாந்த் தூக்கில் தொங்கிய நிலையில் (34 வயதில்) பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தை கே.கே.சிங் பாட்னாவில் அளித்த புகாரின் பேரில், பீகார் போலீசாரிடம் இர...