இந்தியா, மார்ச் 26 -- Actor Suriya: தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சூர்யா. அதிகம் பேசாத, அமைதியான தன் வேலையை மட்டும் செய்யக் கூடியவராகத் தான் சூர்யாவை பலருக்கும் தெரியம். ஆனால், சூர்யாவே அவரைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் எனத் தெரியுமா?

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா, தன்னை பற்றியும், தன் தம்பியை பற்றியும் தங்களுக்கு எப்போது நல்ல உறவுமுறை ஏற்பட்டது என்பது குறித்தும் அந்த நிகழ்சியில் பகிர்ந்து கொண்டிருப்பார்.

மேலும் படிக்க: நான் மும்பையில் செட்டில் ஆகிட்டேனா.. விளக்கம் கொடுத்து குழப்பத்தை தீர்த்த நடிகர் சூர்யா

"எங்க தெருவுலயே சைக்கிள் ரேஸ் எல்லாம் வைப்போம். அப்போ கார்த்தி எல்லாம் பின்னாடி தான் வருவான். அவன நாங்க சேத்துக்கவே மாட்டோம...