இந்தியா, ஏப்ரல் 14 -- Actor Sri: ஸ்ரீயை தொடர்புகொள்ள உதவினால் மகிழ்ச்சி என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

சினிமாவில் சிறப்பாக நடிக்கும் பல நடிகர்களும் வாய்ப்பு கிடைக்காவிட்டால் வாழ்க்கையே மாறி பொருளாதாரத்தில் மிகவும் நலிந்து போகின்றனர். இது போன்ற நிலையில் இருக்கும் நடிகர்களை சக நடிகர்கள் உதவி செய்து தேற்றுவார்கள்.

தற்போது இதே போன்ற நிலையில் மாநகரம் படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீக்கு வந்து விட்டதா என பலரும் கேள்வி எழுந்து இருக்கிறது. இதற்கு காரணம் கடந்த சில மாதங்களாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வரும் போட்டோ மற்றும் வீடியோக்கள்தான், இது கோலிவுட்டை பரபரப்பாகி வரும் அதே நிலையில், அவர் குறித்தான பல்வேறு யூகங்களுக்கும் வித்திட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ம...