இந்தியா, மார்ச் 29 -- Actor Salman Khan: சல்மான்கானின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'சிகந்தர்' வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் விளம்பரத்தில் பிஸியாக இருக்கும் அவர், ஏஎன்ஐ செய்தியிடம் பேசினார். அப்போது, அவர் கடந்த காலங்களில் எண்ணற்ற சர்ச்சைகளை எதிர்கொண்டது பற்றியும், தனது வரவிருக்கும் படம் எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு படத்தையும் சுற்றி சர்ச்சைகள் வருவது ஒரு போக்கு தான். அப்படி 'சிகந்தர்' படத்தைச் சுற்றி சர்ச்சைக்கு வழிவகுக்கும் எந்தவித தந்திரமும் இல்லாததற்கான காரணம் என்னவென்று செய்தியாளர் சல்மான் கானிடம் கேட்டார்.

இதற்கு பதிலளித்த சல்மான் கான், "அட இல்லை சார், எங்களுக்கு எந்த சர்ச்சையும் வேண்டாம். நிறைய சர்ச்சைகளை கடந்து வந்திருக்கிறோம். எங்களுக்கு எந்த சர்ச்சையு...