இந்தியா, மே 23 -- Actor Ramarajan: "கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி ஏற்று நடித்த தவில் வாசிப்பாளர் கதாபாத்திரம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஆனால் அந்த கதாபாத்திரம் முதலில் அவருக்காக வடிவமைக்கப்படவில்லை. ஆம், அது குறித்து அந்த படத்தின் கதாநாயகனான ராமராஜன் அண்மையில் பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் பொழுது, முதலில் கரகாட்டக்காரன் திரைப்படத்தில், தவில் அடிப்பவர் கேரக்டரில், படக்குழு நடிகர் எஸ் எஸ் சந்திரனைதான் நடிக்க வைப்பதாக முடிவு செய்து இருந்தார்கள். அந்த முடிவை அவர்கள் என்னிடம் வந்து சொன்னார்கள். ஆனால் அப்போது அரசியலில் அவர் வேறு கட்சி. நான் வேறு கட்சி என்றிருந்தோம். அவர், அவரது சில படங்களில் கட்சி சம்பந்தமான விஷயங்களை பேசுவார்.

அதனை மனதில் வைத்துக்...