இந்தியா, ஏப்ரல் 6 -- Actor Prashanth: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இன்று இவர் தன்னுடைய 52 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்த நாள் அறிவிப்பாக இவரும், இயக்குநர் ஹரியும் பிரசாந்தின் 55 வது படத்தில் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | Avantika Sundar: 'என்னுடைய உயரமே எனக்கு தடையா.. வாய்ப்பிற்காக அவ்வளவு நாள் காத்திருந்தேன்' -குஷ்பு மகள் பேட்டி!

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசிய பிரசாந்த், 'என்னுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய அப்பா 'பிரசாந்த் 55' என்ற படத்தை பரிசாக கொடுத்திருக்கிறார். அத்துடன் ஒரு மிகப்பெரிய இயக்குர் ஹரியுடன் இணையும் வாய்ப்பை எனக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இது மிகப்பெரிய படமாக வரும். இந்தப்படம் எல்லோருக்கும் பிடித்தமான திரைப்படமாக வரவிருக்கிறது. ...