இந்தியா, பிப்ரவரி 7 -- Actor Ponvannan: நடிகர் பொன்வண்ணன், தன்னை நடிகராகவும், இயக்குநராகவும் ஓவியராகவும் எழுத்தாளராகவும் அடையாளப்படுத்தி வருகிறார். முக்கியமாக அவர் தன் காத்திரமான நடிப்பின் மூலம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை மக்களுடன் மக்களாக பிணைத்து காட்டி வருகிறார்.

இந்நிலையில், அவர், சின்னத்திரை, வெள்ளித்திரை மட்டுமல்லாது அவர் வெப் சீரிஸ்களிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்து வருகிறார். ஹாட்ஸ்டாரில் வெளியான உப்பு புளி காரம் வெப் தொடரில் புள்ளைகளுக்காக தோள் கொடுத்து நிற்கும் அப்பாவாக நடித்து அனைவர் மனதிலும் இடம்பிடித்த பொன்வண்ணன் தற்போது ஜீ தமிழில் வெளியாகும் கெட்டி மேளம் எனும் மெகாத் தொடரில் இணைந்து பயணித்து வருகிறார். இதுகுறித்து டெலி விகடன் யூடியூப் பக்கத்திற்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், நான் சாதிய அடி...