இந்தியா, பிப்ரவரி 17 -- Actor Pandian: பாரதிராஜாவால் மண் வாசனை படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப் பட்டவர் பாண்டியன். பின், இவர் தன் எதார்த்த நடிப்பால், பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றத்தால் மக்களைக் கவர்ந்து தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக வளர்ந்து வந்தார்.

பின், குடியின் பிடியில் சிக்கி, உயிரிழந்தார். இந்நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் நடிகர் பாண்டியனின் மகன், தன் தந்தை குறித்தும் அவர் சினிமாவிற்கு வந்த கதை குறித்தும் பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில், " அப்பா 10வது வரைக்கும் படிச்சாரு. அவரு படிச்ச ஸ்கூல்ல இவரு ஒரு சண்டியர் மாதிரி இருந்தாராம். அப்புறம் அவரு மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல வளையல் வியாபாரம் பண்ணிட்டு இருந்தாராம். அப்போ வாரம் வாரம் கலெக்ஷனுக்கு போவாரு. அந்த டைம்ல தான் பாரதிராஜா சார பாத்திருக்காரு. அவருகிட...