இந்தியா, மார்ச் 12 -- Actor Nassar: தமிழ் சினிமாவில், பல தசாப்தங்களாக தன் நடிப்பு நிகர் வேறு யாரும் இல்லை என பேரெடுத்து வருபவர் நாசர். இவர் நடிப்புத் திறமையில் அறியப்பட்ட காலத்திற்கு மத்தியில் இவர் குறித்து சில அவதூறுகளும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. அதிலும் அவை எல்லாம் குடும்ப உறுப்பினர்களாலே வருகிறது தான் முக்கியமானதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நடிகர் நாசரின் தம்பி நடிகர் ஜவஹர் டேக் 1 எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் தன் குடும்பத்தில் மூத்தவராக பிறந்த நாசர் செய்யத் தவறியது என்னென்ன என பட்டியலிட்டு பேசியுள்ளார்.

மேலும் படிக்க: திரைப்பட கலைஞர்களுக்கு உதவ நடிகர் நாசர் கோரிக்கை

அந்தப் பேட்டியில், "நான் தான் எங்க அம்மா அப்பாவ 35 வருஷமா பாத்துகிட்டேன். இப்போ எங்க வீட்ல சமீபத்துல ஒரு பிரச்சனை வந்தது. அது மீடியாவுல ...