இந்தியா, ஜனவரி 31 -- தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நானி. கடந்த 2023இல் இவரது நடிப்பில் வெளியான ஹாய் நானா படம் சூப்பர் ஹிட்டானது. நானி சினிமா கேரியரில் அவருக்கு ஹிட் கொடுத்த படங்களில் ஒன்றாக இருந்து வரும் நானி தற்போது கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கன்னட சினிமா தயாரிப்பாளரும், கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடித்த அவனே ஸ்ரீமன்நாராயணா படத்தை தயாரித்த புஷ்கரா மல்லகார்ஜுனய்யா இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தனது பீம சேனா நல மகராஜா என்ற படத்தின் கதையை காபி அடித்திருப்பதாக கூறியிருக்கும் அவர், இது ஒரு மலியான செயல் என தனது இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டிருந்தார். இந்த இன்ஸ்டா ஸ்டோரி அவர் பதிவிட்ட சில நிமிடங்களில் நீக்கியுள்ளார்.

ஹாய் நானா மற்றும் பீம சேனா நல மகாராஜா ஆகிய படங்களில் போஸ்டரை ப...