இந்தியா, பிப்ரவரி 5 -- Actor Manikandan: தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் பன்முகத் தன்மை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காரணம் ஒரு திறமையை மட்டும் வைத்துக் கொண்டு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெறுவது அவ்வளவு எளிதான விஷயமாக இருப்பதில்லை.

அதனால், தற்போது நடிகர்களாக வருவோர்கள், பாடகர்களாகவும், இசையமைப்பாளர்களாக, நடன இயக்குநர்களாக, இயக்குநர்களா என பல திறமைகளுடன் உள்ளனர். அவர்களால் தான் தமிழ் சினிமாவில் சர்வைவ்வும் செய்ய முடிகிறது.

அப்படி பன்முகத் திறமை கொண்ட ஒருவராக உள்ளார் நடிகர் மணிகண்டன். தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராகவும், கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும், வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும் தன் பணியை இவர் செவ்வனே செய்து வருகிறார்.

இவரது ஒவ்வொரு படைப்பும் மக்களிடமும், அவரது ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன...