இந்தியா, ஜனவரி 28 -- Actor Madhavan: சிக்ஸ் பேக் இல்லாமல், நடனமாடத் தெரியாமல் 25 வருடங்களாக ஹீரோவாக ஜொலிப்பது எப்படி என்று மாதவன் கூறிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது. 'ஹிஸாப் பராபர்' எனும் இந்தி படத்தின் மூவம் நடிகர் மாதவன் தற்போது மீண்டும் மக்களை சந்திக்க வந்துள்ளார்.

அந்தப் படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில், மாதவன் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நடிகர் மாதவன் ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர், தன் சினிமா வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார்.

1990களின் பிற்பகுதியில் தனது புன்னகையால் பல பெண்களின் மனதை கொள்ளையடித்தவர் மாதவன். மேடி மேடி என பெண்கள் விரும்பும் நடிகராகவும், தான் திரையில் வந்தாலே படம் ஹிட் என்ற தாக்கத்தையும் உருவாக்கினார். இவர், சமீபத்தில் ஜீ5 ஓடிடியில் வெளியான 'ஹிஸாப் பராபர்' படத்தின...