இந்தியா, மார்ச் 29 -- Actor Kamal Haasan: தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படத் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி, தான் சினிமா மீது கொண்ட பற்றின் காரணமாக நடிகர் கமல் ஹாசனால் தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தான் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்த நிறுவனம் பல முக்கிய தமிழ் சினிமாக்களை தயாரித்து வெற்றி கண்டுள்ளது.

இப்படி இருக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மக்களிடம் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் நடிக்க ஆள் எடுத்து ஏமாற்றியதாக தொடர் புகார்கள் வந்துள்ளன. இதை அறிந்த ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை எச்சரிக்கும் விதமாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...