இந்தியா, மார்ச் 25 -- Actor Jiiva: நடிகர் ஜீவா- பாடலாசிரியரும் இயக்குநருமான பா.விஜய் கூட்டணியில் அகத்தியா படம் வெளியானது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் ஜீவா கலாட்டா மீடியாவிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் நண்பன் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "நண்பன் படத்துல தலைவா யூ ஆர் கிரேட் டயலாக் சீன் இருக்குல்ல. அதுக்கு பின்னாடியே ஒரு பெரிய சீன் இருக்கு. இந்தப் படத்துல முதல் முதல்ல இலியானா நடிக்குறாங்க. அவங்கள பாத்ததும், இலியானா செட்டுக்கு வந்துட்டாங்க, இலியான இங்க வந்துட்டாங்க, இலியானா இத பண்றாங்கன்னு ஒரே பேச்சுதான். அப்புறம் நாங்க டைரக்டர்கிட்ட சார் இப்போ என்ன சீன் சார்ன்னு கேக்குறோம். அவரு பேண்ட் அவுக்குற சீன் தான்னு சொல்றாரு. இதக் கேட்டு அப்படியே எங்களுக்கு ...