இந்தியா, பிப்ரவரி 26 -- Actor jiiva: நடிகர் ஜீவா இப்போது, பாடலாசியர், நடிகர், இயக்குநரான பா. விஜய்யுடன் இணைந்து அகத்தியா எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். அர்ஜூன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் இன்டர்நேஷனல் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஜீவா, ராஷி கண்ணா, பா. விஜய், ஐசரி கணேஷ் ஆகியோர் இணைந்து கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அப்போது, நடிகர் ஜீவா தனது 22 ஆண்டு கால சினிமா அனுபவம் குறித்து பல விஷயங்களை பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில், "நான் தமிழ் சினிமாவுக்குள்ள வந்து 22 வருஷம் ஆச்சு. ஆரம்பத்துல இருந்து இப்போ வர எல்லாம் வி...