இந்தியா, பிப்ரவரி 24 -- Actor Dhanush: நடிகர் தனுஷ் தனது 50வது படமான ராயன் வெளியான பின் மிகவும் பிஸியாக நடிப்பிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் பவர் பாண்டி, ராயனைத் தொடர்ந்து இயக்கிய 3வது திரைப்படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது.

இந்நிலையில், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷை வைத்து இயக்கும் இன்னும் பெயரிடப்படாத D55 படம் குறித்த அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் FICCI நிகழ்ச்சியில் பேசிய போது, தனுஷ் 55 படம் பற்றி உங்களுக்கு என்ன கருத்து சொல்ல தோன்றுகிறதோ அதை சொல்லலாம் என தொகுப்பாளர் கூறினார்.

அப்போது பேசிய ராஜ்குமார் பெரியசாமி, இந்தப் படத்தில் பெரிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அவரின் நடிப்புத் திறன் அபரிவிதமாக இருக்கும். அவரின் நடிப்புக்கு தீனி போடும் வித...