இந்தியா, ஏப்ரல் 10 -- Actor Arjun Das: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஆஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் ரிலீஸாக உள்ள நிலையில், அப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்திருக்கும் அர்ஜூன் தாஸ் குட் பேட் அக்லி படத்துடனான தன் நினைவுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அர்ஜூன் தாஸ் எக்ஸ் தளப் பதிவில் வெளியிட்ட இந்த அறிக்கையில், அஜித்தின் ரசிகன் தொடங்கி சக நடிகனாக மாறியது குறித்தும், படப்பிடிப்பு சமயத்தில் அஜித்திடம் இருந்து கற்றுக் கொண்டது குறித்தும் தன் கருத்துகளை வெளிப்படுத்தியதுடன், படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நன்றி சொல்லி உள்ளார்.

இன்னும் சில மணிநேரங்கள் தான். எனக்கு இன்னும் நிறைய பதட்டமாக, உற்சாகமாக, ஆர்வமாக இருக்கிறது. அஜித் சாரின் படங்களுக்கான மார்க்கெட்டிங் & விளம்பரங்களுடன் என...