இந்தியா, பிப்ரவரி 7 -- Actor Arav: அஜித் சாருக்கும் விஜய் சாருக்கும் இடையில் நல்ல பந்தம் இருப்பதாக நடிகர் ஆரவ் மனம் திறந்த பேட்டியளித்துள்ளார்.

நடிகர் அஜித் குமாருடன் பழகிய தருணங்களை, விடாமுயற்சி படத்தில் நடித்த அனுபவங்களை நடிகர் ஆரவ் கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி யூட்யூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் ஆரவ் அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம். அதில்,

ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இதற்காகப் பல ஆண்டுகள் காத்திருந்து இருக்கிறேன். முன்பே நான் அஜித் சார் கூட நடிக்கவேண்டியது. மிஸ் ஆகிடுச்சு. விடாமுயற்சி படத்தில் நான் இருக்கிறேன் என்று உறுதியானதும் ரொம்ப ஹேப்பியாக இருந்துச்சு.

அஜித் சார் ரொம்ப ஸ்பெஷல். என்னுடைய மனைவிக்கும் சரி, என்னுடைய குடும்பத்துக்கும் சரி அவர் ரொம்பவே ஸ்பெஷல் தான். சினிமாவில் நெருங்கி...