இந்தியா, மார்ச் 9 -- Actor Ajith Kumar: நடிகர் அஜித் குமார், சமீபத்தில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புகளை விரைந்து முடித்து கொடுத்து விட்டு தனது கார் பந்தய போட்டிகளுக்கு தயாரானார். இது தொடர்பான வீடியோக்களும் செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், தற்போது அஜித்திற்காக பிராத்தனை செய்துள்ளார் குட் பேட் அக்லி பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

மேலும் படிக்க: சீறிப்பாய்ந்த கார்..தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்ளும் அஜித்..

இதுதொடர்பாக ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "உங்கள் கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும் சார். இது மிகவும் கடினமான விளையாட்டு. நீங்கள் செலுத்திய கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அசாதாரணமானது. நீங்கள் பெற வேண்டிய அனைத்தையும் பெறுவதற்காக வாழ்த்துவதுடன் உங்களு...