இந்தியா, பிப்ரவரி 6 -- விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படும் நடிகர் ஆரவ், படம் தொடர்பாக பல்வேறு நேர்காணல்களை கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் அவர் அண்மையில் லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் நடிகர் அஜித் எப்படி அவரது பணத்தை கையாளுகிறார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது, ' அஜித் சார் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க கூடியவர் நாங்கள் ஒரு நாள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் எங்களிடம் பணம் தொடர்பாக சில விஷயங்களை பகிர்ந்தார்.

அப்போது அவர் எங்களிடம் உங்களது வரியை நீங்கள் சரியாக செலுத்தி விடுங்கள்; உங்களது சம்பளம் உயரும்பொழுது, நீங்கள் கட்ட வேண்டிய வரியும் நிச்சயமாக உயரும். அப்படி வரி உயரும் பட்சத்தில், நீங்கள் அதை...