இந்தியா, பிப்ரவரி 23 -- Actor Aamir Khan: ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2025 இல் பேசிய நடிகர் ஆமிர் கான், குழந்தைகளை மையமாகக் கொண்ட படங்களை அதிகமாக எடுக்க தான் விரும்புவதாக கூறினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "குழந்தைகள் பற்றிய விஷயங்கள் தான் என்னை உற்சாகப்படுத்துகிறது. இந்தியாவில் குழந்தைகள் தொடர்பான படங்களை குறைவாகவே உருவாக்குகிறோம். வழக்கமாக நாம் அதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, இங்கே டப்பிங் செய்து வெளியிடுகிறோம். அதனால் குழந்தைகளைப் பற்றிய கதைகளை உருவாக்க விரும்புகிறேன்," என்று கான் கூறினார்.

மகாபாரத கதையை படமாக இயக்குவது எனது கனவு. அதனால் இப்போது அந்தக் கனவைப் பற்றி என்னால் யோசிக்க முடிகிறது. அதில் எனக்கும் ஒரு பங்கு கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

59 வயதான ஆமிர் கான், தனது தயாரிப...