இந்தியா, ஏப்ரல் 10 -- கோடை காலம் தொடங்கிவிட்டதால் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கமானது அதிகரித்து காணப்படுகிறது. இதனால் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள விஷயங்களை மேற்கொள்வது இயல்பானதுதான். வெப்பம் காரணமாக வெளிப்புறங்களில் வீசும் காற்று கூட அனல் காற்றாக மாறி அசெளகர்யமான உணர்வை ஏற்படுத்துகின்றன.

எனவே நாம் இருக்கும் இடத்தையும் குளிர்ச்சியான சூழலுக்கு மாற்ற ஏர் கூலர், ஏர் கண்டிஷ்னர் (ஏசி) போன்ற எலெக்ட்ரிக் சாதனங்களை பயன்படுத்துகிறோம். இதன் மூலம் நாம் வசிக்கும் அறை, படுக்கையறை போன்றவற்றை குளிர்ச்சியான சூழ்நிலைக்கு மாற்றி கொள்ளலாம். இதனால் நிம்மதியான தூக்கத்தை பெறுவதுடன், உடலையும் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம்.

அதேசமயம் இந்த சாதனங்களை பயன்படுத்தும்போது சில தற்காப்பு விஷயங்கள், நடவடிக்கைகளை ம...