இந்தியா, ஜனவரி 30 -- Aadvik Ajith: அப்பாவுக்கு ரேஸ்.. மகனுக்கு அத்லெட்டிக்.. பள்ளி தடகளப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஆத்விக் அஜித் குறித்துப் பார்ப்போம்.

அஜித் குமார் எஃப் 1 கார் ரேஸில் இறங்கி, இருப்பது போலவே, அவரது ஒன்பது வயது மகன் ஆத்விக்கும் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது.

ஆத்விக் அஜித், தான் சென்னையில் படிக்கும் பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றார்.

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித், ஜனவரி 29ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் ஆத்விக், அவரது பள்ளியில் தடகளப் பாதையில் தனது போட்டியாளர்களைவிட மிகவும் முன்னால் ஓடும் வீடியோவைப் பகிர்ந்து இருந்தார்.

அவர் தனது தலைப்பில் ஒரு சில எமோஜிகளை வெளியிட்டிருந்தார். அதில், பிரகாசம், கொண்டாட்டம் என எழுத...