இந்தியா, மார்ச் 28 -- இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில், நடிகர் பிருத்விராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ஆடு ஜீவிதம் (த கோட் லைஃப்). உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது

படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 14 வருட உழைப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

வறுமை காரணமாக, தன்னை நம்பி வந்தவளை காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும் என்பதற்காக, அவள் வயிற்றில் இருக்கும் அவரின் குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக, நண்பர் ஒருவரின் உதவியை பெற்று, அரபு நாட்டுக்கு உதவியாளர் பணிக்கு பயணப்படுகிறார் நஜீப் முகமது (பிரித்விராஜ்). ஆனால் எதிர்பாராத விதமாக அவர் வாழ்க்கை முழுவதும் அடிமைப்படு...