இந்தியா, பிப்ரவரி 19 -- Aadhi: ஈரம் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் அறிவழகன். இவர் நடிகர் ஆதியை வைத்து மீண்டும் இயக்கியிருக்கும் படம், 'சப்தம்'. இப்படம் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் பேட்டி அளித்து வருகின்றனர்.

அப்படி இந்தியா கிளிட்ஸ் ஊடகத்துக்கு நடிகர் ஆதியும், சப்தம் பட இயக்குநர் அறிவழகனும் சேர்ந்து கொடுத்த பேட்டியின் தொகுப்பு இது:

நடிகர் ஆதி: அப்படியே எதிராக நடந்துச்சு. மரகத நாணயம் படத்தில் லவ் ஃபெயிலியர் ஆன பொண்ணுகூடயே நிஜத்தில் கல்யாணம் ஆகிடுச்சு. நீங்கள் சொல்ற ஒன்சைடு லவ் என் வாழ்க்கையில் நடந்தது இல்லை. எனக்கு அந்த எக்ஸ்பிரியன்ஸ் இல்லை. ஈர்ப்பு இருந்திருக்கும். அழுகுற அளவு போனது இல்லை. லவ் பண்ணியிருக்கேன். அது டபுள் சைடு லவ்வாக இருந்தது. அடுத்து பிரேக்அப் ஆகியிருந்தது. இப்போது...