இந்தியா, பிப்ரவரி 8 -- Aadhi: நடிகர்களுடன் ஆழ்ந்த நட்பு இல்லை என்றும்; அவர்களுடன் இருப்பது தொழில் நிமித்தமான நட்பு தான் என்றும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக ஹிப்ஹாப் தமிழா ஆதி டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு இது:

பாடல்களுக்கான தேவை கதை நகர்த்துறது எல்லாம் உலகமயம் ஆகிடுச்சு என்பதால், நெட்பிளிக்ஸ், அமேஸான் வந்ததால் பாடல்களின் தாக்கம் குறைஞ்சிடுச்சு சார். அதனால் வந்தால் புரோமோ சாங் அப்படி தான் வருது. மியூசிக்கலி படங்கள் வரும்போதுதான் அதற்குண்டான தேவை இருக்குது சார். இது தவிர்க்கமுடியாது. பாடல்கள் இல்லாத நிலை நோக்கி சினிமா நகரத்தொடங்கியிருச்சு என்பதால், அதைத் தடுக்கமுடியாது சார். ஒரு காலத்தில் ஆங்கிலப் படங்களில் பாடி டான்ஸ் ஆடுனாங்க. அடுத்து தனியாக பாடல்கள் வந்தத...