இந்தியா, ஜனவரி 31 -- தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து உள்ள ஆதவ் அர்ஜூனா தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக செயல்படுவார் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்து உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டு உள்ளார். விசிகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து உள்ள ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பை விஜய் வழங்கி உள்ளார்.

ஏற்கெனவே விஜயின் அரசியல் வியூக வகுப்பாளராக உள்ள ஜான் ஆரோக்கியசாமி உடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரச்சாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மை பணிகளை ஆதவ் அர்ஜூனா மேற்கொள்வார் என விஜய் தெரிவித்து உள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து திமுகவின் வியூக வகுப்பாளர்களில் ஒருவராக ஆதவ் அ...