இந்தியா, பிப்ரவரி 2 -- A.R.Rahman: தமிழ் சினிமாவின் எவர்கிரீன் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் விக்ரமன். இவரது படைப்புகள் அனைத்தும் காலம் கடந்தும் பேசுகின்றன. பாடல்களும் படத்தின் வசனங்களும் ஹிட் அடித்ததுடன், சிலவை மீம் டெம்ப்ளேட்டுகளாக இன்றும் வலம் வருகின்றன.

இவரது படம் டிவியில் ஓடுகிறது என்றாலே குடும்பமே அமர்ந்து பார்த்து ரசிக்கும் விதமாக தான் இன்றும் இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில், இவர் தன் புதிய மன்னர்கள் படத்தில் நடந்த அனுபவங்கள் குறித்தும், படத்தின் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் சமீபத்தில் ரெட்நூல் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் புதிய மன்னர்கள் படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "எனக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் சாரோடவும், சிற்பி சாரோடவும் நல்ல வேவே லென்த் செட் ஆச்சு. எனக...