இந்தியா, பிப்ரவரி 6 -- A.R.Rahman: சென்னையில் நடந்த கச்சேரியில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் - இங்கிலாந்து பாடகர் எட் ஷீரன் இணைந்து ஊர்வசி பாடலை பாடினர்.

இங்கிலாந்து பாடகர் எட் ஷீரன் தனது சுற்றுப்பயணத்தின் மூலம் இந்தியா முழுவதும் தனது இசையை கச்சேரிகள் நடத்தி பரப்பி வருகிறார்.

அப்படி, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதியான நேற்று சென்னைக்கு கச்சேரியை எடுத்து வந்த இங்கிலாந்து பாடகர் எட் ஷீரனுடன், சிறப்பு விருந்தினராக மேடையில் அவருடன் இணைந்தார், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

பாடகர் எட் ஷீரனின் 'ஷேப் ஆஃப் யூ' மற்றும் ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி பாலிசி' பாடல்களை இருவரும் சேர்ந்து பாடினர். அப்போது மைக் பழுதானது, அந்த நிகழ்ச்சியில் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கச்சேரி முடிந்த சிறிது நேரத்திலேயே, எட் ஷீரன் இன்ஸ்டாகிராமில் நி...